திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 - 2015 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி 4 கோடியே 32 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றப்படவில்லை. 

செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார்களை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மேல்முறையீடு மனு மீது உரிய பதில் அளிக்க அமலாக்கத்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டிஸ் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC notice issue to Senthil balaji 131222


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->