ஸ்டாலின், உதயநிதி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் சவுக்கு சங்கர் புகார்! - Seithipunal
Seithipunalதமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது பிரபல ஊட்டகவியலாளர் சவுக்கு சங்கர் பரப்பரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில், இன்று ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், முதலமைச்சர் ஸ்டாலின் தன் மகனின் நிறுவனம் ஆதாயம் பெறுவதற்காக சட்டத்தை மீறி உள்ளார் என்றும், ஸ்டாலின் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி வழங்கி இருப்பதாகவும் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்த சவுக்கு சங்கர் அளித்துள்ள பேட்டியில், "லஞ்ச ஒழிப்புத் துறையை தொடர்ந்து தமிழக ஆளுநரிடமும் புகார் அளிக்க உள்ளேன். திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் நான் நீதிமன்றமும் செல்வேன். இதில் என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ, அனைத்தையும் நான் எடுப்பேன்" என்று ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியது. மேலும் சிறப்புக் காட்சியாக நள்ளிரவு ஒரு மணிக்கு திரையரங்குகளில் இந்த திரைப்படங்கள் வெளியானது. 

படத்தின் கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி கொண்டாடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்த பலியாகிய சம்பவமும், மேலும் சில திரையரங்குகளில் சில வருந்துதக்க சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Sankar complaint Against Stalin And Udhayanithi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->