திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்.! - Seithipunal
Seithipunal


சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், சேலம் புறநகர் மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,

C. பரமேஸ்வரன் (அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு 7-ஆவது வார்டு உறுப்பினர்) M. அருண்குமார் (அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு 11-ஆவது வார்டு உறுப்பினர்), சத்யா மகேந்திரன் (அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு 5-ஆவது வார்டு உறுப்பினர்), உமாராணி முத்துசாமி (அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு 12-ஆவது வார்டு உறுப்பினர்), சாந்தி பெருமாள் (அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு 18-ஆவது வார்டு உறுப்பினர் ),  P. முத்துசாமி (சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்).

மகேந்திரன் (அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), P. பெருமாள் (அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem admk member dismissal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->