ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? பதுங்குவாரா?! சரியாக காய் நகர்த்திய டாக்டர் ராமதாஸ் வைத்த செக்!  - Seithipunal
Seithipunal


"ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்களை விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது! 

பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன? என்பதை பஞ்சாப் காங்கிரசிடம்  தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்!" பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து திமுக விளக்கம் அளிக்குமா? 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை நிலையில் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிரதிபலிக்குமா?, இதனை அதிமுக, பிரச்சார வியூகமாக பயன்படுத்துமா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss tweet questioned dmk stand in 7 Tamils release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->