மின்சார பயன்பாட்டை குறைக்க யோசனை சொல்லும் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகளில் ஒன்று எரிசக்தி பயன்பாட்டை குறைப்பது ஆகும். அதற்கான வழிமுறைகளில் ஒன்றாக கட்டடங்களில் குளிர்ச்சியை உருவாக்குவதற்கான மின்சாரப்பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதனை சாத்தியமாக்க 'குளிர்ச்சியான மேற்கூறைகள் இயக்கம்' தொடங்கப்பட வேண்டும்.

கட்டடங்களில் குளிர்ச்சியை உருவாக்க பயன்படுத்தப்படும் பிதிசி வாயும் மிகமோசமான குறைந்த காலமே நீடிக்கும் காலநிலை மாசுக்காற்று (SLCPs -Short-Lived Climate Pollutants) வகையை சேர்ந்தது ஆகும். கரியமில வாயுவைக் காட்டிலும் HFC ஆயிரம் மடங்கு கூடுதலாக வெப்பத்தை பிடித்துவைக்கும் சக்தி மிக்கது.

கட்டங்கள், வீடுகளின் மேற்கூறையின் வண்ணத்தை மாற்றுதல் அல்லது மேற்கூறையையே மாற்றுதல் என்கிற வகையில் - குளிர்ச்சியை உருவாக்குவதற்கான மின்சாரத்தை பெருமளவில் குறைக்க முடியும். மிக எளிதாக வீட்டின் மேல் பகுதியை வெள்ளை நிறத்திற்கு மாற்றுவதே பெருமளவு எதிர்சக்தியை குறைக்கும். வாய்ப்புள்ளவர்கள் கூறையையே மாற்றி அமைக்கலாம். புதிய கட்டடங்கள் கட்டும்போது நீண்டகால நோக்கில் மேற்கூறையை வெள்ளை நிறத்தில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை கொண்டு அமைக்கலாம்.

இந்த செயல்பாடுகள் கட்டடங்களிலும் வீடுகளிலும் வெப்பத்தை குறைக்கும். நகரங்களில் சுற்றுப்புற வெப்பநிலையை மிகப்பெரிய அளவில் மாற்றும். ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாடு குறையும். இதனால், காலநிலை மாற்றம் அதிகரிப்பது குறைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் நகர்ப்புற பகுதிகளுக்கு அவசியம் தேவை.

'குளிர்ச்சியான மேற்கூறைகள் இயக்கம்' தொடர்பான India Cooling Action Plan கொள்கையை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. தெலுங்கானாவில் ஹைதராபாத் நகரம் இதனை மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறது (Hyderabad Cool Roof Program).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss tips to reduce electric bill


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal