அரசியலமைப்புக்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! மத்திய அரசுக்கு அமைச்சர் பதிலடி!! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டம் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு வாதிட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி "கடந்த அதிமுக ஆட்சியில் 3 சட்டங்களை உள்ளடக்கி கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ள காரணங்களை பரிசீலனை செய்து மீண்டும் புதிதாக சட்டம் கொண்டு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு மீது மேல் முறையீடு செய்யாமல் மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டுள்ளார். மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதாக ஒரு கதையும் கூறியுள்ளார். மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் விதிகளை கொண்டு வந்துள்ளதே தவிர புதிதாக எந்த சட்டத்தையும் ஏற்றி இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

மத்திய அரசின் வழக்கறிஞர் அந்த சட்டத்தை கொடுத்தால் அதைப் படித்து பார்த்து தெரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதிகளில் சூதாட்ட நிறுவனங்களை காப்பாற்றுவதற்காகவும் அரசின் வருவாயை பெருக்குவதாக மட்டுமே அமைந்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தமிழக அரசு மாநில பட்டியலில் உள்ள சட்டப்பிரிவு 33, 34(i), 34(xi) ஆகிய விதிகளின் கீழ் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளின் கீழ் தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளோம். 

சூதாட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சூதாட்டத்தை திறமையான விளையாட்டு என நேரடியாக விளையாடும் பொழுது மட்டுமே கூறியுள்ளது. ஆனால் ஆன்லைனில் விளையாடும் பொழுது மூன்றாவதாக புரோக்ராமர் என்பவர் இருக்கிறார். அவர் சூதாட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றக் கூடியவர். புரோக்ராம் எப்படி செயல்படுத்துகிறார்களோ அதன்படி தான் சூதாட்டம் ஆட்டம் நடக்கும். அதனால்தான் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுபவர்கள் தங்களது பணத்தை இழப்பதோடு உயிரையும் இழக்கிறார்கள். இந்த கருத்தை தொடர்ந்து தெளிவாக சொல்லி வருகிறோம். எனவே அதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பது தமிழக அரசின் விருப்பம் மற்றும் வேண்டுகோள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi said TNgovt has authority bring online gambling ban law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->