#BigBreaking || 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக, காங்கிரஸ்.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல பஞ்சாப் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி பாஜக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 257 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி 120 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரியங்கா காந்தி பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று, நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் மூன்று இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. வெளியான முன்னிலை நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ளது. 

இதேபோல், பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி முதல் முறையாக அரியணை ஏற உள்ளது உறுதியாகி உள்ளது. வெளியான தேர்தல் முன்னிலை நிலவரப்படி பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி எண்பத்தி எட்டு இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எஸ் ஏ டி ஒன்பது இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவை பொறுத்தவரை நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக ஐந்து இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab uttar pradesh election counting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->