இரட்டை இலைக்கு "கையெழுத்திடும் அதிகாரம்" யாருக்கு? - ECI-யை அதிர விட்ட ஓபிஎஸ் தரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவசரம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனதில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதில் வேட்பாளர்களுக்கான படிவம் ஏ மற்றும் பி-யில் யார் கையெழுத்து இடவேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. 

அதனை முடிவு செய்யாமல் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒரு தடவை தரப்புக்கு வழங்கி இருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறமானது என தனது மனதில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரியும் தன்னுடைய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pugazhenthi petitioned ECI who is authority of two leaf symbol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->