திமுக-காங்கிரஸ் கூட்டணி தலையில் துண்டு தான்.! திருமாவளவன் செய்த வேலை.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்களிலும், திமுக கூட்டணிக்கு 13 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் இந்த கூட்டணியில் ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்தியால்பேட்டை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முத்தியால்பேட்டையில் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு விட்டு கேரளா, தமிழக தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள சென்று விட்டனர்.

இந்த நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து புதுச்சேரிக்கு முக்கியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது, திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

தற்போது திமுக -காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்போதாவது பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதே போல, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் அவர்கள்  போட்டியிடும் ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு விட்டு, தமிழகம் திரும்பி திரும்பி விட்டனர்.

தங்களது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் முத்தியால்பேட்டையில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு விட்டு கேரளா தமிழகம் புறப்பட்டனர்.

புதுச்சேரியில் இப்படிப்பட்ட ஒரு கூட்டணி அமைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையே இப்படியே போனால், நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று புதுச்சேரியின் களநிலவரம் உணர்த்துகிறது.

திமுக -காங்கிரஸ் -இந்திய கம்யூனிஸ்ட் -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நடத்திய இந்த சுயநல தேர்தல் பிரச்சாரம், கூட்டணியில் உள்ள முரண்பாடுகளை வெட்டவெளிச்சமாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHERRY DMK ALLIANCE ELECTION CAMPAIGN


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->