'எத்தனை தேர்தலில் தோற்றோம் என்பது பிரச்சினையில்லை; உங்களுக்கு எதிராக போராடுவோம்'; லோக்சபாவில் பிரியங்கா விவாதம்..! - Seithipunal
Seithipunal


'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதன்போது, காங்கிரஸ் எம்பி பிரியங்கா பேசியதாவது: பாஜ தேர்தலுக்காக பணியாற்றுகிறது. நாங்கள் நாட்டுக்காக பணியாற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், எத்தனை தேர்தலில் தோற்றோம் என்பது பிரச்சினையில்லை எனவும், இங்கு அமர்ந்து, உங்களுக்கு எதிராகவும், உங்களது கொள்கைக்கு எதிராகவும், நாட்டுக்காக போராடுவோம் எங்களை உங்களால் தடுக்கவே  முடியாது என்று பேசியுள்ளார்.

மேலும், 'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று விவாதம் நடப்பதற்கு, மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால், இதுபோன்ற சூழ்நிலையில் பிரதமர் தனது பங்கை விரிவுபடுத்த விரும்புகிறார் என்பது ஒன்றும், மற்றுமொன்று  நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மற்றும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பொது மக்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு விரும்புகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து விவாத்தில் பேசிய ப்ரியங்கா; பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை குறைகிறதாகவும்,  அவரின் கொள்கைகளால் நாடு பலவீனம் அடைகிறதாகவும், இதனால், வெட்கப்பட்டுக் கொண்டு, அதிகாரத்தில் உள்ள எனது நண்பர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று குக்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்கள் மகிழ்ச்சியற்றவர்களாகவும், துயரத்திலும் உள்ளதாகவும், மக்கள் பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர். அவற்றை தீர்க்கவில்லை முடியாமல், பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே விரும்புகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

'வந்தே மாதரம்' குறித்து இன்று விவாதிக்கின்றனர். வந்தே மாதரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்துள்ளது. அது குறித்து விவாதிக்கப்படவில்லை. இன்று பிரதமர் விவாதத்தை தொடங்கியுள்ளார். அவர் பேச்சு சிறப்பானதாக இருந்தது என்பதை சொல்வதற்கு தயக்கமில்லை. ஆனால், உண்மையை பற்றி பேசும்போது அவர் பலவீனமாகிவிடுகிறார் என்றும், உண்மையை மக்கள் எப்படி சொல்ல வேண்டும் என்பதும் ஒரு கலை. நான் இந்த அவைக்கு புதியவர்.நான் மக்களின் பிரதிநிதி. நடிகை கிடையாது என்று பிரியங்கா காந்தி நாடாளுன்ற விவாதத்தில் பேசியுள்ளார்.

மேலும், மஹாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், மவுலானா ஆசாத், சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி ஆகியோரை காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆளுங்கட்சியில் உள்ள எனது நண்பர்கள் ஆணவத்தில் உள்ளனர் என்றும் கூறியதோடு, தேசிய பாடலில் உள்ள ஒரு பகுதி நீக்கப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக போராடி உயிரை நீத்தவர்களுக்கு செய்யப்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது முன்னாள் பிரதமர் நேரு விமர்சிக்கப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக அவர் 12 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பிறகு, 17 ஆண்டுகள் அவர் பிரதமர் ஆக இருந்துள்ளார். நீங்கள் எவ்வளவு விமர்சனம் செய்தாலும், அவர் இஸ்ரோவை உருவாக்காவிட்டால், இன்று 'மங்கள்யான் திட்டம்' சாத்தியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிஆர்டிஓ அமைப்பை அவர் உருவாக்கவிட்டால், ;தேஜஸ் விமானம்; சாத்தியம் ஆகி இருக்காது என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படாவிட்டால், 'கோவிட்' என்ற சவாலை எப்படி சமாளித்து இருப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பியதோடு, ஜவஹர்லால் நேரு, இந்த நாட்டுக்காக வாழ்ந்தார். இந்த நாட்டிற்காக சேவை செய்யும்போது உயிரிழந்தார் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka Gandhi Vadra says she will fight against you no matter how many elections she loses says debate in Lok Sabha


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->