காங்கிரஸ் தாலி பறிக்குமா? என் அம்மா நாட்டுக்காக தாலியை இழந்தார்.!! பிரியங்கா காந்தி ஆவேசம் - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாராளுமன்ற பொது தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்து ஆறு கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்திய பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்து அதை மறுமதிப்பீடு செய்யும் என கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. 

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு நேற்று பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் தாலி மற்றும் தங்கத்தை காங்கிரஸ் படக்க விரும்புவதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது அதில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது அப்போது காங்கிரஸ் யாருடைய தங்கத்தையாவது பரிந்துள்ளதா? 

போர் நடந்த போது இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்து தங்கத்தையும் நாட்டிற்காக தியாகம் செய்தவர். என் தாய் தன் தாலியை இந்த நாட்டிற்காக இழந்தார். காளியின் முக்கியத்துவத்தை மோடி புரிந்து கொண்டிருந்தால் அவள் இவ்வாறு பேசியிருக்க மாட்டார். இந்தியாவில் பண மதிப்பு நீக்கப்பட்ட போது பெண்கள் தங்கள் தாலிகளை அடமானம் வைத்தனர் அப்போது பிரதமர் நரேந்திர மோடி எங்கே போனார்? விவசாயிகள் உயிரிழந்த போது அந்த விதவைகளின் தாலியை பற்றி நரேந்திர மோடி நினைத்தாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi reply to pm Narendra Modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->