எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை எதற்கு.? தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்ற நிலையில் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கேப்டனின் இரண்டு கண்கள் எப்படி இருக்கின்றதோ, அதே போல் தான் கேப்டன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

எந்த நோக்கத்திற்காக தேமுதிக கட்சி தொடங்கப்பட்டதோ அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மெரினாவில் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என்று தமிழக அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், எழுதாத பேனாவிற்காக 80 கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைப்பதற்கு பதிலாக மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாம் என்றும் ஆனால் இப்போது தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakanth speech about Karunanidhi Pen Statue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->