அரசியல் பரபரப்பு... பிரேமலதாவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

இதற்காக தமிழகம் முழுவதும் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் திடீரென சேலம் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் ஈரோட்டில் இருந்து தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றார். 

இதற்கிடையே தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த் சேலத்தில் பிரசாரம் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha Vijayakanth campaign cancelled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->