பீகார் தேர்தலில் தனியாக நின்ற பிரசாந்த் கிஷோருக்கு கடும் பின்னடைவு.. தமிழ்நாட்டில் விஜய்க்கு எச்சரிக்கை மணி! விஜய் சுதாரிப்பாரா! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

243 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், NDA கூட்டணி 120 முதல் 160 இடங்கள் வரை வெற்றி பெறும் என கூறுகின்றன. அதே நேரத்தில், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) இணைந்த மகாகத்பந்தன் கூட்டணி (MGB) 90 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

JVC Polls, Poll Diary, டைனிக் பாஸ்கர், People’s Pulse உள்ளிட்ட முக்கிய கருத்துக் கணிப்புகளும் NDAக்கு சாதகமான முடிவுகளையே காட்டுகின்றன.

JVC Polls: NDA – 135 முதல் 150 இடங்கள் | MGB – 88 முதல் 103 இடங்கள்

Poll Diary: NDA – 184 முதல் 209 இடங்கள் | MGB – 32 முதல் 49 இடங்கள்

டைனிக் பாஸ்கர் Exit Poll: NDA – 145 முதல் 160 இடங்கள் | MGB – 70 முதல் 90 இடங்கள்

People’s Pulse: NDA – 133 முதல் 159 இடங்கள் | MGB – 75 முதல் 101 இடங்கள்

இந்த முறை 2020 தேர்தலைவிட NDA 20 முதல் 35 இடங்கள் அதிகமாகப் பெறும் வாய்ப்பு உள்ளது.

நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ கட்சி 2020ல் 43 இடங்களைப் பெற்றிருந்தது. இம்முறை 59 முதல் 68 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது.பாஜக 2020ல் 74 இடங்களைப் பெற்ற நிலையில், இம்முறை 72 முதல் 82 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.இதனால் பீகாரில் NDA ஆட்சி தொடரும் என வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

“மாற்று அரசியல்” என்ற முழக்கத்துடன் தேர்தலுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் ‘ஜன சுராஜ்’ கட்சி, பெரும்பாலான கருத்துக் கணிப்புகளிலும் வெற்றி வாய்ப்பு இல்லாமல் போனது.

சாணக்கியா, டைனிக் பாஸ்கர், மேட்ரைஸ், பீப்பிள்ஸ் பல்ஸ் போன்ற நிறுவனங்கள் கூறியதாவது –“ஜன சுராஜ் கட்சிக்கு பூஜ்ஜியத்திலிருந்து ஐந்து இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.”

அவரது கட்சியின் மொத்த வாக்கு சதவீதம் 9.7% என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகார் அரசியலில் பிரசாந்த் கிஷோரின் தாக்கம் குறைந்துவிட்டது தெளிவாகிறது.

பிரசாந்த் கிஷோர் “மாற்று அரசியல்” என்ற பெயரில் பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்றாக தனியாக களமிறங்கினார். ஆனால், இறுதியில் மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளைப் பிரிப்பதிலேயே அவரது தாக்கம் முடிந்தது.

அதே மாதிரி நிலைமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

விஜய் 2026 தேர்தலில் தனியாக போட்டியிட்டால், சிறுபான்மை சமூகங்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் மத்தியில் வாக்கு பிளவு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

இதனால் 2 முதல் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெல்லக்கூடிய பல தொகுதிகளில் முடிவுகள் மாறக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பீகாரில் பிரசாந்த் கிஷோர் ‘மாற்று அரசியல்’ என்ற பெயரில் தனியாகப் போட்டியிட்டார். முடிவாக வாக்குகளை பிரித்ததோடு நிற்க, வெற்றி வாய்ப்பை இழந்தார்.அதேபோல், விஜய் தனியாகப் போட்டியிட்டால், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளின் வாக்குகளில் பிளவு ஏற்படும்.

அது திமுகக்கு நன்மையா, அதிமுகக்கு நஷ்டமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், பீகாரில் பி.கே.வுக்கு ஏற்பட்டது போல தமிழ்நாட்டிலும் விஜய்க்கு அதே அரசியல் சவால் உருவாகலாம் என கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் காட்டுவது ஒன்றே —மாற்று அரசியல் மட்டுமல்ல, உறுதியான அடித்தளமும் கூட்டணி ஆதரவும் தான் வெற்றியின் ரகசியம்.பிரசாந்த் கிஷோரின் பீகார் தோல்வி,2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான விஜய்க்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதில் அரசியல் வட்டாரங்கள் ஒன்றுபட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prashant Kishor who stood alone in the Bihar elections, suffers a severe setback A warning bell for Vijay in Tamil Nadu Will Vijay make a comeback


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->