சைடு கேப்பில் எஸ்கேப் ஆன அதிமுக நிர்வாகி., சுற்றிவளைத்து பிடித்த போலீசார்.! அடுத்தது வழக்குகள் பாய்ந்தது.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செந்திலை, கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கரை அடுத்த கல்யாணஓடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு வயது 54 ஆகிறது. இவர் அதிமுகவின் மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, கடந்த 14ம் தேதி செந்திலை மதுக்கூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது, செந்திலின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் மதுக்கூர் காவல் நிலையம் முன்பு, திரண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதில் ஒரு ஆதரவாளர் உச்சபட்சமாக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது தனது ஆதரவாளர்களை சமாதானம் செய்வதாக கூறிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த செந்தில், அப்படியே தப்பித்து தலைமறைவாகினார்.

இதனையடுத்து, செந்தில் ஆதரவாளர்கள் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான செந்திலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்த நிலையில், சென்னையில் செந்திலை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், செந்தில் அவருடன் இருந்த காமராஜ்(42), ராஜவர்மன்(46), ஜவஹர்(47) ஆகியோரை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை ஒருவர் ஒருமையில் அவதூறாக பேசிய வழக்கில் செந்திலுக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரின்பேரிலும் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police arrest escaped admk member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->