வங்கதேச அரசியலில் மாற்றம் - ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் - இந்தியாவிற்கு பாதகமா..?! - Seithipunal
Seithipunal



வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவர், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து உடனடியாக வங்கதேசத்தில் ஆட்சி ராணுவம் வசம் சென்றது. இதை வங்கதேச ராணுவ தளபதி தொலைக்காட்சியில் தோன்றி உறுதிப் படுத்தினார். 

எனவே வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள ராணுவ ஆட்சி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஷேக் ஹசினா இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டியது தான் தற்போது நடந்துள்ள இந்த போராட்டத்திற்கான முக்கிய காரணம் என்றும் அரசியல் நிபுணர்கள யூகித்துள்ளனர். 

இந்தியாவுடன் அதிக நல்லுறவு கொண்டிருந்த வங்கதேச பிரதமராக ஷேக் ஹசினா இருந்தார். எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்க ஹசினா இந்தியாவை அதிகம் சார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவும் வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களில் சுதந்திரமாக இருந்தது. இந்த ஆட்சி மாற்றத்தால் தற்போது இந்தியாவுக்கு பாதகமான நிலையே ஏற்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையேயான வணிகத் தொடர்புகள் தற்போது கேள்விக் குறியாகி உள்ளன. மேலும் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பு பாகிஸ்தான் சார்புடையதாக அறியப்படுகிறது. எனவே தற்போதைய ஆட்சி மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராகவே செயல்படும் என்று தெரிகிறது. 

இதனிடையே சீனாவும் இடையில் புகுந்து வங்கதேசத்தின் ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கருதப்படுகிறது. இதுவும் இந்தியாவிற்கு பாதிப்பே ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் யூகித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poitical Change in Bangladesh May Affect India


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->