ஊடக சுதந்திரத்தின் மீது அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கைது மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. அரசின் செயல்பாடுகள், பொதுக் கொள்கைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் முன்வைப்பது சனநாயக சமூகத்தின் இயல்பான அம்சமாகும்.

ஊடகங்கள் என்பது மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முக்கியமான பாலமாக செயல்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, குறைகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் குரலை வெளிப்படுத்துவது ஊடகங்களின் அடிப்படை பொறுப்பாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக செய்தியாளர்கள் அச்சமின்றி செயல்படக்கூடிய சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் அல்லது விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான வழி கைது நடவடிக்கைகள் அல்ல. கருத்துக்கு கருத்து, விமர்சனத்திற்கு விளக்கம், குற்றச்சாட்டுக்கு ஆதாரப்பூர்வமான பதில் என்பதே சனநாயக நடைமுறையாகும். ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மக்களிடையே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, கருத்துச் சுதந்திரம் குறித்த அச்சத்தையும் உருவாக்குகின்றன.

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் இயற்கை நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகப் பணியாற்றுவோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

எனவே, செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் குடிமக்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கைது மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். செய்தியாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தேவையான சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும். கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்கள் எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk ramadoss press issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->