டாக்டர் இராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி!
PMK Ramadoss Birthday PM Modi
பா.ம.க. நிறுவனர், தலைவர் இராமதாசுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அக்கட்சியின் செய்திக்குறிப்பில், "பா.ம.க. நிறுவனர் தலைவர், மருத்துவர் அய்யா ராமதாசுக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, 'உங்கள் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் அன்றைய நாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டது' என்று தெரிவித்தார்
அப்போது, அய்யா அவர்கள், "நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமரை வாழ்த்தினார்.
அய்யாவின் வாழ்த்தை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், முன் மாதிரியாக நீங்கள் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்" என்று அய்யாவை வாழ்த்தி மகிழ்ந்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PMK Ramadoss Birthday PM Modi