மது ஒழிக்கப்பட வேண்டும்! எங்களுக்கு மகிழ்ச்சி தான்! பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதை பொருட்கள் தான். 

பாட்டாளி மக்கள் கட்சியிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இந்த போதை பொருளை கட்டுப்படுத்துவோம். பத்து அல்லது ஐந்து காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் தான் காவல்துறைக்கு பயம் வரும். காவல்துறையினருக்கு தெரியாமல் தமிழ்நாட்டில் எந்த பொருளையும் விற்க முடியாது.

மத்திய அரசு முன்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதித் தரமாட்டோம் என மத்திய அரசு சொல்லக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் மாநிலத்துக்கு நல்லதும் உண்டு பாதகங்களும் உண்டு.

கடந்த 45 வருடங்களாக மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்கள், மாநாடு, உச்சநீதிமன்றம் வரை சென்று நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை எல்லாம் மூடி மதுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இப்போதாவது திருமாவளவன் மது ஒழிப்பு கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் மிக மோசமான பிரச்சனை இது. சாதி மதம் அரசியல் கட்சிகளை கடந்து மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு மதுவை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும். அப்போதுதான் நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் ஒருவர் விடுதலை சிறுத்தை கட்சி நடத்தக்கூடிய மதுவிலக்கு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வீர்களா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ் அழைப்பு வந்தால் பார்ப்போம் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK leader Anbumani Ramadossb say about vck tirumalavan manadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->