இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் மனநிறைவளிக்கிறது - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss India Pakistan Conflict
இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் மனநிறைவளிப்பதாகவும், தேசப் பாதுகாப்புக்கான ராணுவ நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதட்டம் அதிகரித்து வந்த நிலையில், அதைத் தணிக்கும் வகையில் இன்று மாலை முதல் இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதன் மூலம் தேவையற்ற மோதல்களும், அழிவுகளும் தவிர்க்கப்படும்.
அதேநேரத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சிந்து நதி நீர்ப்பகிர்வு உடன்படிக்கை ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் ஏதேனும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், இராணுவமும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss India Pakistan Conflict