மனம் கவர்ந்த ஆங்கில நாவலாசிரியர் ஜெப்ரி ஆர்ச்சர் மறைவு ஆங்கில இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss condolence to Jafri archer
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரும், இங்கிலாந்து பழமைவாதக் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெப்ரி ஆர்ச்சர் அவரது 86-ஆம் வயதில் காலமானார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
ஆக்சன் நாவல்களை எழுதுவதில் பெயர்பெற்ற ஆர்ச்சர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வாசகர்களை தமது எழுத்துக்களால் கட்டிப் போட்டு வைத்திருந்தார். எனது பள்ளிக்காலத்தில் அவரது நாவல்களை நான் விரும்பி படிப்பேன். எனது மனம் கவர்ந்த நாவலாசிரியராக அவர் திகழ்ந்தார். அவரது நாவல்கள் இதுவரை 30 கோடி பிரதிகள் விற்றுள்ளன என்பதிலிருந்தே அவரது எழுத்துகளின் மதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்களை எழுதி வந்த அவர், தமது கடைசி மூச்சு வரை எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். அவர் எழுதிய Adam and Eve நாவல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இறுதி வரை எழுத்தையும், இலக்கியத்தையும் நேசித்த ஆர்ச்சரின் மறைவை ஈடு செய்ய முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், வாசகர்கள், நலம் விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
pmk anbumani ramadoss condolence to Jafri archer