ஆபாச மிரட்டல்.. விசிக நிர்வாகி மீது பாமக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


ஆபாச வார்த்தைகளால் மிரட்டியதாக விசிக நிர்வாகி மீது பாமக பெண் நிர்வாகி போலிசில் புகார் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் விசிக நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார் கொடுத்து இருக்கிறார். 

அவர் கொடுத்துள்ள புகாரில், இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் தனது உறவினர்களுடன் சாலையில் சென்று கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது கிழக்கு காவேரிபுரம் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகளான நவீன், இளையராஜா, சசி மற்றும் முருகன் உள்ளிட்ட 4 பேரும் அப்பொழுது வந்து தன்னுடன் இருந்த மூன்று பெண்களையும், மிகவும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கேலி செய்ததாக கூறியுள்ளார்.

மேலும், அப்பொழுது, எங்களிடம் இருந்த 2 கிராம் மோதிரத்தை பலவந்தமாக பறித்துக் கொண்டு, இதை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். 

இதுபோல, முன்னதாக குழந்தைகள் நல மைய அலுவலக கேட்டின் பூட்டை உடைத்து விசிக நிர்வாகி இளையராஜா அங்கே கூட்டம் நடத்தியதாக பழனி என்ற நபர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Admin women raised Police Case On vck Secretary


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->