உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


யூடியூப் சேனல் பக்கத்தில் உலகத் தலைவர்களை பின்னுக்குத்தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலக தலைவர்களில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட பெரும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த யூடியூப் சேனல் பக்கத்தில் அவர் அளித்துள்ள பேட்டி, அவர் ஹிந்தி திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த யூடியூப் சேனல் பக்கம் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று, உலக தலைவர்களில் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இருக்கிறார். ஜெய்ர் போல்சனோரா யூடியூப் சேனல் பக்கத்திற்கு முப்பத்தி ஆறு லட்சம் சப்ஸ்கிரைபர்களை மட்டுமே பெற்றுள்ளது.

மூன்றாவதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் 30 லட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi youtube subscribers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->