அந்த ஒரு பதக்கம்.! வரலாறு படைத்தது இந்தியா., பெரும் மகிழ்ச்சியில் குவியும் வாழ்த்து மழை.! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அணி விதிவிலக்கான திறமைகள், நெகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான உறுதியைக் காட்டியது. இந்த வரலாற்று வெற்றி ஹாக்கியில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள்.

வெண்கல பதக்கத்தை நம் தேசத்துக்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து எங்கள் இந்தியா பெருமை கொள்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நம் தேசிய கொடிக்கு ஒரு பில்லியன் சியர்ஸ்! நண்பர்களே, நீங்கள் பதக்கத்தை வென்று விட்டீர்கள்., நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்! நாங்கள் இதனை கொண்டாட போகிறோம். எங்கள் ஆண்கள் ஹாக்கி அணி ஆதிக்கம் செலுத்தியது. இன்று மீண்டும் மீண்டும் ஒலிம்பிக் வரலாற்று புத்தகங்களில் தங்கள் விதியை வரையறுத்தது நம் இந்தியா!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish to medalist male hockey Indian team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->