தமிழ்த்தாயின் கலைமகனுக்கு சர்வேதச விழா., பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆற்றிய உரை.! - Seithipunal
Seithipunal


பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்று வரும் சர்வதேச பாரதி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார், அப்போது பிரதமர் மோடி, பாரதியாரின் சுதந்திர கவிதைகளை தமிழ் மொழியில் கூறி அசத்தினார்.

பிரதமர் மோடியின் உரையில், "ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி. பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார். தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்.


 
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி" என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஆற்றிய உரையில், "பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார். பாரதி வாழ்ந்த இல்லத்தை ஜெயலலிதா, நினைவிடமாக மாற்றினார்.பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது" என்று தமிழக முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi tn cm wish to Bharathiyar Jayanthi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->