குறைய போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.. மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா தொற்று  மீண்டும் அதிகரிப்பது குறித்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகளவிய சூழலில் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் குறித்த பிரச்சினைகள் எழுப்ப விரும்புகிறேன். போர் காரணமாக விநியோக சங்கிலி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. உலகளவிய நெருக்கடி பல்வேறு சவால்களை கொண்டு வருகிறது. 

அப்படிப்பட்ட ஒரு நிலைமையில், கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வினை, மேலும் மேம்படுத்துவது கட்டாயமாக உள்ளது. மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றுக்கான உற்பத்தி வரியை குறைத்தது. இதேபோன்று மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்த பலன் போய் சேர உதவ வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டது. 

சில மாநிலங்களில் வரியை குறைத்தனர். ஆனால் சில மாநிலங்களில் மக்களுக்கு எந்த பலனும் வழங்கவில்லை. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இது அந்த மாநிலங்களின் மக்களுக்கு செய்கிற அநீதி மட்டுமல்லாமல், இது மற்ற மாநிலங்களுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. 

மராட்டியம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சில காரணங்களுக்காவோ, பிற காரணங்களுக்காகவோ மத்திய அரசு சொன்னதைக் கேட்கவில்லை. எனவே இந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi says about petrol price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->