#சற்றுமுன்: தொடங்கியது பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம்., வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் இந்தியாவில் கண்டறியப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உள்ளது. இதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து 867 ஆக உள்ளது. இதன் காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 80.86 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், 7 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உ.பி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் சுகாதார மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi meeting with tn cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->