ஆபரேஷன் சிந்தூர்: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா நாளை உரை; எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தகவல்..!
PM Modi and Amit Shah to address opposition parties in Parliament tomorrow
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தை பாராளுமன்றத்தில் இன்று (ஜூலை 28) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். ஆபரேஷன் சிந்தூரின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை பற்றி அவர் விரிவாக உரையாற்றினார்.
இந்த ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாளை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இன்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் உரையை அடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் இது குறித்து பேசினர். அதில், ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை என்றால் அது எப்படி வெற்றியாகும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை (ஜூலை 29) நண்பகல் 12 மணியளவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் விளக்கம் அளிக்க உள்ளார். பின்னர் அனைவரின் உரையைத் தொடர்ந்து நாளை மாலை 05 மணியில் இருந்து 07 மணிக்குள் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்கும் வகையில் பேச உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
PM Modi and Amit Shah to address opposition parties in Parliament tomorrow