திமுகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பெரம்பூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், மாவட்ட அவை தலைவர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர், சோத்தூர், ஆனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திமுக மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சார்ந்த தொண்டர்கள் 150 பேர் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைந்து கொண்டனர். 

அப்போது ஓஎஸ் மணியன் கூறியதாவது, திமுக ஆட்சி ஐந்து ஆண்டுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.  கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் குறுவை பருவத்திற்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்கின்ற நிலையை தாண்டி, முற்றிலும் இல்லை என்கின்ற நிலைக்கு சென்று விட்டது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

perambur dmk members join admk


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->