#BREAKING || சிபிஐ சோதனையில் சிக்கியது என்ன? வெளியான பரபரப்பு தகவல்.! ப.சிதம்பரம் போட்ட டிவிட்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல்  அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில், சென்னை, டெல்லி, மும்பை என கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

முதல்கட்ட தகவலின்படி, சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக வந்த புகார் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். குழு எனக்கு ஒரு எஃப்ஐஆர் காட்டியது, அதில் நான் குற்றம் சாட்டப்பட்டவனாக குறிப்பிடப்படவில்லை.

தேடுதல் குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை மற்றும் எதையும் கைப்பற்றவில்லை. இந்த தேடலின் நேரம் சுவாரஸ்யமானது என்பதை நான் சுட்டிக் கட்டியாக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Chidambaram twit about CBI Raid


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->