முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது. 

அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ரமேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பா சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p chidambaram meet mk stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->