மாநிலங்களவை தேர்தல்.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது. 

அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ரமேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல அதிமுக வேட்பாளர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்த்தனர். 

இதனிடையே தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P chidambaram filling nomination today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->