'குதிரை பேரத்தை மறைக்க பழனிசாமி மீது அவதூறு பரப்புகிறார்'; தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்துள்ள ஓ.எஸ்.மணியன்..! - Seithipunal
Seithipunal


ஆட்சியை காப்பாற்ற தவெகவில் குதிரை பேரம் நடத்தியதை மூடிமறைக்க பழனிசாமி மீது பல அவதூறான தகவல்களை ஆதவ் அர்ஜுனா கூறிவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ்.மணியன் கூறியதாவது; 

அதிமுகவையும், திமுகவையும் தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜுனா பல அவதூறான செய்திகளை சொல்லி வருகிறார் என்றும், அவருடைய அரசியல் காலத்தை முன்னே சென்று, எத்தனைக் கட்சிகள் மாறி வந்துள்ளார் என்று பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா விசிகவில் பணியாற்றினார், அடுத்து திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவிலும் இணைவதற்காக பேசினார், அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டார். ஆனால், அது மறுக்கப்பட்டதால், தவெகவில் இணைந்தார் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், அவரை தொடர்ந்து பேசுகையில், ஆதவ் அர்ஜுனா சொல்லும் குற்றச்சாட்டை நாங்கள் 100 சதவீதம் மறுக்கிறோம் என்றும், சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து எடுத்து வைத்துள்ளார். எழுச்சிப் பயணத்தில் மக்களை சந்தித்து திமுக அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாகவே 53 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது என்று கூறியுள்ளார். அத்துடன், திமுகவை விமர்சித்ததுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இதுவெல்லாம் தெரியாமல் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் கருத்துவேறுபாடு உள்ள சிலரை அழைத்து அமைச்சராக்குவதற்கு, ஆட்சியை காப்பாற்ற தவெகவில் குதிரை பேரம் நடத்திவிட்டார்கள். அதனை மூடிமறைக்க பழனிசாமி மீது பல அவதூறான தகவல்களை ஆதவ் அர்ஜுனா சொல்லி வருவதாக ஓ.எஸ்.மணியன் செய்துயாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OS Manian has criticized TVK Minister Adhav Arjuna alleging that he is spreading slander against Palaniswami to cover up the horse trading scandal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->