#BREAKING: திடீர் திருப்பம்.. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்..? - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் போட்டியிடவுள்ளதாக அறிவித்த நிலையில் ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோன்று ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மீது நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் பெற்று அதிமுக வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம்  இருந்து வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை கழகம் ஒப்புதல் கடிதம் வாங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team candidate going to withdraw from Erode East


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->