எடப்பாடியே ஆடிப்போகுமளவுக்கு ஓபிஎஸ் செய்த செயல்.! உற்சாகத்தில் அமித்ஷா.!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த அவரை வரவேற்க முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் பாஜக தலைவர் வேல்முருகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றனர். 

தற்போது மாபெரும் மாநாட்டில் உரையாற்றிய கொண்டு இருக்கும் அமித்ஷா தான் இன்றைய ஹாட் டாபிக். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தது. அந்தவகையில் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுக பாஜக கூட்டணியை இன்று முதல்வர் உறுதி செய்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசியபோது அமித்ஷா குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி இருக்கின்றார். அவரை நவீன காலத்தின் அரசியல் சாணக்கியர் என்று புகழ்ந்துள்ளார். 

அத்துடன் இனிவரும் தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் அதிமுக-பாஜக மட்டுமல்லாது பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை போல இந்த முறையும் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops speech about amit sha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->