#BREAKING | ஓபிஎஸ்.,க்கு ஆதரவா? யாருக்கு ஆதரவு? ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து தங்களது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில்,  இந்த இடைத்தேர்தலில் தாங்களும் போட்டியிட உள்ளதாக அறிவித்து, தங்களுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு திரட்டி வருகிறார்.

பாஜகவின் அண்ணாமலையை, அக்கட்சியின் தலைமையகமான கமல் ஆலயத்தில் நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கேட்டுக்கொண்டார்.

பின்னர் சந்தித்த ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவித்தார். மேலும், பாஜக போட்டியிட்டால் நிச்சயமாக நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை.

பாஜக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறதோ? அவருக்கு தான் எங்களின் ஆதரவும் என்று ஒரே போடாக போட்டுள்ளார் ஜான் பாண்டியன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS meet ADMK Candidate Jhon Pandiyan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->