ஓபிஎஸ், உதயநிதிக்கு எதிரான வழக்கு.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கை, ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 66 இடங்களை மட்டுமே வெற்றிபெற்று தோல்வி அடைந்தது. அதே சமயத்தில், திமுக 133 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இதில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

அந்தவகையில், நேற்று திமுக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோரின் வெற்றிக்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி மற்றும் துரைமுருகன், விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளிக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும்,
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேட்புமனுவில் ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை, மனுத் தாக்கல் செய்த மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், ஓ பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிரான இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி ஒத்திவைத்தது உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், உதயநிதி வெற்றிக்கு எதிரான வழக்கை வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and udhayanithi victory case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->