பெங்களூருவில் எதிர்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு கனமழை பெய்து வருவதால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை பெங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition party 2 discussion meeting in Bangalore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->