"ஒரே நாடு - ஒரே தேர்தல்" : சட்டக் குழு பரிசீலனை - மத்திய அமைச்சர் எழுத்துபூர்வமாக பதில்.!
one nation one election info july
"ஒரே நாடு - ஒரே தேர்தல்" நடத்துவது குறித்து, சட்டக் குழு பரிசீலிபத்தாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த எழுத்துபூர்வமாக பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் தடைபடுகிறது.
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் செலவினமும் அதிகமாகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் ஒருசேர நடத்துவது குறித்து சட்டக்குழு பரிசீலனை செய்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 50 சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. மக்களவை தேர்தல் செலவுகளை மத்திய அரசும், சட்டமன்ற தேர்தல் செலவுகளை மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன.
ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரு சேர நடத்தினால், செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் 50:50 என்ற விழுக்காட்டில் பிரித்துக் கொள்ளலாம்.
எனவே, நாடாளுமன்றக் குழு ஒன்று இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்தக் குழு சில பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இது குறித்து சட்ட ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று அதில் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
English Summary
one nation one election info july