மீண்டும் அதிர்ச்சி! 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரம்!
odisha 15 years old girl attempt murder
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில், சாலையில் நடந்து சென்ற 15 வயது சிறுமி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் தீக்காயமடைந்த சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார். சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து துணை முதல்வரும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்குப் பொறுப்பான பிரவதி பரிதா, எக்ஸ் தளத்தில் பதிந்து, இந்த கொடூர செயலில் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார்.
சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவுகளை அரசு ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து மூன்று மர்ம நபர்கள் குற்றம் புரிந்துவிட்டு தப்பிச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தனது தோழியின் வீட்டிற்குச் செல்லும் போதே இந்த தாக்குதல் நிகழ்ந்ததாகவும், அதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீசார் பலங்கா பகுதியில் விசாரணையை தீவிரமாக நடத்தியுள்ளனர்.
English Summary
odisha 15 years old girl attempt murder