சீமான் நேரில் ஆஜராகியே வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
NTK Seeman Case Varunkumar Court order
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவுகள் பதிவுசெய்யப்பட்டதாக நாம் தமிழர் கட்சி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அத்துடன், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும், செய்தியாளர் சந்திப்புகளிலும் வருண்குமாரைப் பற்றி அவதூறாக பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வேளை, இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கை விசாரணைக்கு ஏற்றதாக கூறி, ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அன்றைய நாள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
NTK Seeman Case Varunkumar Court order