புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி; தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி..!
NR Congress Returns to Power in Puducherry
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஏப்ரல் 09 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது புதுவையில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் களமிறங்கினார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் 91.23% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளின் படி, புதுவையை ஆளும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி, வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி பல இடங்களில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
NR Congress Returns to Power in Puducherry