மாறுகிறதா வடசென்னை? - 19 புதிய மேம்பாலங்கள், 1315 சாலைப் பணிகள்; திராவிட மாடல் அரசின் அதிரடி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


வடசென்னையின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திரு.வி.க. நகர் தொகுதியில் ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை' மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 10 இணையர்களுக்குத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த அவர், அரசு சார்பில் சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், சென்னையின் வளர்ச்சிக்காகத் திராவிட மாடல் அரசு ஆற்றி வரும் சீரிய பணிகளைப் பட்டியலிட்டார். "தலைநகர் சென்னையை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதே எமது இலக்கு.

மெட்ரோ ரயில் முதல் பிரம்மாண்ட மேம்பாலங்கள் வரை நகரின் பெரும்பாலான அடையாளங்கள் தி.மு.க. ஆட்சியில் உருவானவை," எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்தாண்டுகளில் வடசென்னையில் மட்டும் மேயர் சிட்டிபாபு பாலம், செங்கை சிவம் பாலம் என ரூ.500 கோடிக்கும் மேலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

உள்கட்டமைப்புப் பணிகள் குறித்துப் பேசுகையில், சென்னை முழுவதும் ரூ.2,359 கோடி மதிப்பில் சுமார் 20,000 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 1315 சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட செயற்கைப் பேரிடரின் கசப்பான நினைவுகளை மீட்டெடுத்த அவர், தற்போது ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் 1,422 கி.மீ. நீளத்திற்குப் பலப்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வடிகால் அமைப்புகள், எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ளும் வலிமையைச் சென்னைக்கு வழங்கியுள்ளதாகப் பெருமிதம் கொண்டார்.

மணமக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர், தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டார். தனது பெயரின் பின்னணியில் உள்ள ரஷ்யப் புரட்சியின் வரலாற்றையும், தந்தை கலைஞர் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவே 'ஸ்டாலின்' எனப் பெயரிட்டதையும் நினைவுகூர்ந்த அவர், வரும் தலைமுறைக்குத் தமிழ் அடையாளத்தை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Chennai changing 19 new flyovers 1315 road projects Dravidian model government impactful report


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->