SIR மூலம் வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல்...! நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணி குறித்து, பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் (மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்), அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், SIR-ன் அடிப்படை நோக்கம், அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல் என்றார்.

"SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்."

NRC, CAA-ன் மாற்று வடிவமா?

தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்த்ததால், அவற்றைச் செயல்படுத்த முடியாத நிலையில், அவற்றைத் 'தற்போது SIR வடிவில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி' இது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

இலக்கு: வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுவார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு. ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்களின் பெயர்களை நீக்குவதே இதன் இலக்கு.

உதாரணம்: அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலைக் குறிப்பிட்ட அவர், ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nirmala seetharaman husband press meet sir


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->