திமுக கூட்டணியில் புதிய சிக்கல்! ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
New problem in DMK alliance Will Rahul Gandhi come to campaign Congress reluctant to answer Stalin in shock
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாதது அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தகவல்களின் படி, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து மேடையில் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் பலமுறை நேரம் கேட்டும், இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, திமுக தலைவர்களை சந்திக்காததுடன், அங்குள்ள மேடைகளிலும் திமுக வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தவில்லை. இதே நேரத்தில், ஸ்டாலின் திமுக–காங்கிரஸ் வேட்பாளர்களை ஒரே மேடையில் நிறுத்தி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைவெளிக்கான முக்கிய காரணமாக தொகுதிப் பங்கீடு விவகாரம் கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பு சுமார் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்த நிலையில், திமுக 28 தொகுதிகளையே ஒதுக்கியது. இதனால் ராகுல் காந்தி முழுமையாக திருப்தி அடையவில்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், அவர் விரும்பிய சில வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது மனக்கசப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதவி மாற்றம் குறித்த பேச்சும் எழுந்துள்ளது.
இதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளகத்தில் சிலர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதே நல்லது என கருத்து தெரிவிப்பதும், தற்போதைய அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் தேசிய தலைவர்களின் குறைந்த பங்கேற்பு கூட்டணிக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சூழலில், ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்வாரா? அல்லது இந்த ‘மௌனம்’ தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது அரசியல் வட்டாரத்தின் கவனமாக உள்ளது.
English Summary
New problem in DMK alliance Will Rahul Gandhi come to campaign Congress reluctant to answer Stalin in shock