புதிய பாஸ்போர்ட் வழக்கு! சென்னை ஐகோர்ட்டில் சீமானுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டது என்ன?
New passport case What did judges order Seeman Chennai High Court
சென்னை ஐகோர்ட்டில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 'சீமான்'அவர்கள் தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின்போது சீமான் தரப்பில், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி தனது மனு நிராகரிக்கப்படுகிறது.
மேலும், அரசியல் காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதால் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து பாஸ்போர்ட் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
New passport case What did judges order Seeman Chennai High Court