தலைநகர் டெல்லியில் நடைபெறும் முக்கிய விழா.! பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.! - Seithipunal
Seithipunal


புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.

தலைநகர் டெல்லியில் தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடம், கடந்த 1977ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தப் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததன் காரணமாகவும், இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து 971 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.

தற்போது உள்ள பழைய கட்டிடத்தின் அருகிலேயே, புதிய கட்டிடம் கட்டப்பட திட்டமிடப்பட்டது. இந்த கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் டாட்டா பிராஜக்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் 2022ஆம் ஆண்டில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new parliament building


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->