ரூ.4 கோடி வழக்கில் நயினாருக்கு தொடர்பு.. சிக்கிய புதிய ஆதாரம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பது குறித்தான முக்கிய ஆதாரம் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிப்பட்ட பணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் கைதானவர்கள் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பெயரில் அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தனக்கும் 4 கோடி ரூபாய் பணத்திற்கும் தொடர்பில்லை என நயினார் நாகேந்திரன் கூறிவந்த நிலையில் தற்போது அவருக்காக ஒதுக்கப்பட்ட அவசரக் கோட்டா டிக்கெட்டில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தற்போது வரை 15 ககும் மேற்பட்டோர் இடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New evidence linking Nainar in Rs4 crore case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->