நெல்லை மேயர் ராஜினாமா.? திமுக வட்டாரத்தில் பரபரப்பு! முற்றுப்புள்ளி வைத்த மேயர் சரவணன்! - Seithipunal
Seithipunal


நெல்லை மேயர் சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த ராஜினாமா கடிதம் மீது திமுக தலைமை முடிவும் எடுக்கவில்லை என்றும், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய பிறகு இந்த ராஜினாமா கடிதத்தின் மீதான நடவடிக்கை இருக்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் இருக்கும் நெல்லை மாநகராட்சியில் அவருக்கு எதிராக சொந்த கட்சியைச் சேர்ந்த 40 கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கி உள்ளனர். நெல்லை மாநகராட்சி நடக்கக்கூடிய மாமன்ற கூட்டத்தொடர்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திமுக கவுன்சிலர்கள் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் கே.என் நேருவை நேரில் சந்தித்து திமுக கவுன்சிலர்கள் மேயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நிலைமைய சரவணன் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இருந்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல் வெளியானது. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நெல்லை மேயர் சரவணன் "நான் அண்ணா அறிவாலயம் சென்றது உண்மை, ஆனால் ராஜினாமா கடிதம் வழங்கவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Mayor submitted his resignation letter to DMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->