'தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்': நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு..!
Nayinar Nagendran alleges that farmers are suffering due to the administrative incompetence of the Tamil Nadu government
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஆய்வு செய்துள்ளதோடு, அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசும் போது கூறியதாவது: ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்சினையில்காட்டவில்லை என குற்றம் சுமத்தியுள்ளதோடு, தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran alleges that farmers are suffering due to the administrative incompetence of the Tamil Nadu government